105 வயது கைதிக்கு நிரந்தர ஜாமீன்: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

இந்தியா செய்திகள் நீதி மன்றம்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 105 வயதான ரசிக் சந்திர மண்டலுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஜாமீனை உச்ச நீதிமன்றம் நிரந்தரமாக உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.மேற்குவங்க மாநிலம் மால்டாவைச் சேர்ந்த ரசிக் சந்திர மண்டல், கடந்த 1988ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த வழக்கில் 1994ஆம் ஆண்டு, அவருக்கு 68 வயதாக இருந்தபோது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நீண்ட காலமாக சிறையில் இருந்து வந்தார்.இந்நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு ரசிக் சந்திர மண்டலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தற்போது அவருக்கு 105 வயதாகியுள்ள நிலையில், ஏற்கனவே வழங்கப்பட்ட ஜாமீனை நிரந்தரமாக்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2024ஆம் ஆண்டு வழங்கிய ஜாமீனை தற்போது நிரந்தரமாக உறுதி செய்துள்ளது. மேலும், இந்த வழக்கையும் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.நீண்ட காலமாக சிறையில் இருந்த ஒருவர், தற்போது 105 வயதை எட்டியுள்ள நிலையில் அவருக்கு நிரந்தர ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. வயது, நீண்ட கால சிறைவாசம் உள்ளிட்ட சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *