நடிகர் விக்ரம் லார் கிப்பான் குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, ஈரோட்டில் கேசவநாதன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் 11 வெளிநாட்டு விலங்குகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.அதில் 2 லார் கிப்பான் குரங்குகள், 7 ஆப்ரிக்கன் பூனைகள் மற்றும் 2 டஃப்டெட் கபுச்சி குரங்குகள் அடங்கும். பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகள் தற்போது அதே இடத்தில் வனத்துறை கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

