பல சர்ச்சைகளிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் வெளியானது

அரசியல் இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

நடிகரும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்,மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்திருந்த படம் மாமன்னன் இன்று வெளிவந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரவித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று வெளிவந்துள்ள மாமன்னன் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார். இவர், கமல் நடித்திருந்த ‘தேவர் மகன்’ படம் குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றினை படவிழாவில் பேசினார். இது, பல்வேறு சமூகத்தினை சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் கட்சயினர் மத்தியில் பேசுபொருளானது. இதனால் மாமன்னன் படத்தை வெளியிட கூடாது என பலர் போர்கொடி பிடித்து வந்தனர். இந்த எதிர்ப்புகளை மீறி இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இன்று, இத்திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாமன்னன் படத்திற்கு தடை கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் இருப்பதாக கூறி படத்திற்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டனர். மாரி செல்வராஜ் ஜாதி மோதல் ஏற்படும் வகையில் பல பொய்யான கருத்துக்களை பதிவு செய்ததாக கூறி பல்வேறு ஃபார்வர்டு பிளாக் அமைப்பினர் தென் தமிழகத்தில் போஸ்டர்களை அடித்து ஒட்டி உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தை போலவே தேனி மாவட்டத்திலும் ‘மாமன்னன்’ படத்தி்கு எதிர்ப்புகள் வலுத்திருந்தது. தேனியில், பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புகளுக்கு இடையே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *