சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல் 7 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றுள்ளது

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தலில், வழக்கறிஞர் மோகன கிருஷ்ணன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. கடைசியாக கடந்த 2016 நவம்பர் 23 தேதி தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2018 ஆம் ஆண்டு முடிவடைந்தது.
இந்நிலையில், சங்க தேர்தல் தொடர்பாக அறிவிப்புக்கும், தேர்தல் புதிய விதிகளுக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் காரணமாக தேர்தல் தள்ளிப்போனது. அதன்பின்னர், கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கபட்டது. வாக்குப்பதிவு தொடங்கியவுடன் வழக்கறிஞர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தேர்தல் மீண்டும் ரத்து செய்யபட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.
உயர்நீதிமன்ற ஆவின் நுழைவாயில் வழியாக வழக்கறிஞர் வாக்களிக்க அனுமதிக்கபட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) வீரர்கள் பாதுகாப்புடன் வாக்கு பதிவு செய்ய வழக்கறிஞர் அனுமதிக்கப்பட்டனர். வாக்கு பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தவுடன் மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும் எனவும், முதலில் தலைவர் பதவிக்கும், பின்னர் துணைத்தலைவர் பதவிக்கும், செயலாளர் பதவிக்கும் வாக்கு எண்ணப்பட்டது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராக மோகன கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுமார் 465 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் எற்றிப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *