நாடு முழுவதும் மருந்து கடைகளில் சிசிடிவி கட்டாயம்

இந்திய வணிகம் இந்தியா செய்திகள் மருத்துவம் மருத்துவம்

மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு மூலம் வழங்கப்படும் மருந்துகளின் விற்பனையை கண்காணிக்க, நாடு முழுவதும் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் சிசிடிவி கேமராக்களை கட்டாயமாக பொருத்த ஒன்றிய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.தகுதியான மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சில மருந்துகள் முறைகேடாக விற்பனை செய்யப்படுவதை தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் மருந்துகளின் விற்பனை முறையை கண்காணித்து, விதிமுறைகளை மீறி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய முடியும்.இதற்காக மருந்துகள் விதிகள், 1945-ல் திருத்தங்களை மேற்கொள்ள ஒன்றிய சுகாதார அமைச்சகம் வரைவு அறிக்கையை செப்டம்பர் 8ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த மாற்றம் தொடர்பான திட்டம் முதலில் மருந்துகள் ஆலோசனைக் குழுவிடம் ஆலோசிக்கப்பட்டது. அந்தக் குழுவும் மருந்து கடைகளில் சிசிடிவி கேமராக்களை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *