வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வருவதாக அநாட்டு ராணுவ தளபதி வக்கார் உஸ்-ஜமான் அறிவித்துள்ளார். பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டிலிருந்து தப்பிச் சென்ற நிலையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசை ராணுவம் அமைப்பதாக அந்நாட்டு ராணுவ தளபதி வக்கார் உஸ்-ஜமான் நாட்டு மக்களுக்கு இடையே உரையாற்றினார்.
வங்கதேசத்தில் ஆளும் அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறியதை ராணுவம் உறுதி செய்தது. அனைத்து போராட்டங்களும் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று ராணுவத் தளபதி வக்கார் உஸ்-ஜமான் உறுதியளித்தார். வங்கதேசத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தப்பிய ஷேக் ஹசீனா இந்தியாவின் திரிபுரா மாநிலம் அகர்தலாவுக்கு வந்தடைந்தார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியா வழியாக லண்டன் தப்பிச் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வங்கதேசத்தில் உள்ள பிரதமர் ஷேக் ஹசீனாவின் வீட்டை போராட்டக்காரர்கள் சூறையாடினர். வங்கதேசத்தின் தந்தை என போற்றப்படும் முஜிபூர் ரகுமானின் சிலையை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர்.