சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை, இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அக்டோபர் 5-ஆம் தேதி நடைபெற்றது.இந்த சந்திப்பின்போது இரு தரப்பினரும் தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் இடையேயான உறவுகள், வர்த்தகம், கல்வி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரில் தமிழர்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். அங்கு தமிழ் மொழிக்கும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் சைமன் வோங் வேட்டி, சட்டை அணிந்து முதலமைச்சர் விஜய்யை சந்தித்தது கவனம் பெற்றுள்ளது. அவரது இந்த உடை தமிழர் கலாசாரத்தின் மீதான மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்ததாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

