அமெரிக்காவில் எச்1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக அதிபர் டிரம்ப் உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து அமெரிக்காவில் உள்ள சுகாதார நிறுவனங்கள், மத நிறுவனங்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆகியோரை கொண்ட கூட்டமைப்பு, டிரம்ப் அறிவித்துள்ள எச்1பி விசா கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.அந்த மனுவில்,’எச்1பி விசாவுக்கான கட்டணத்தை தற்போது பன்மடங்கு உயர்த்தி இருப்பது திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அரசின் தற்போதைய முடிவால், மருத்துவமனைகள் மருத்துவ ஊழியர்களையும், தேவாலயங்கள், போதகர்களையும், ஆசிரியர்களையும் இழக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்த உத்தரவை தடுத்து, விசா கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
