அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த, செலஸ்டிஸ் என்ற விண்வெளி நிறுவனம், உயிரிழந்தவர்களின் சாம்பலை விண்வெளிக்கு கொண்டு செல்லுவதன் மூலம் இறந்தவர்கள் விண்வெளியில் பயணித்தது போன்ற ஒரு நினைவை உண்டாக்கும் வகையில், இறந்தவர்களின் அஸ்தியை விண்ணுக்கு அனுப்பி வருகிறது.இந்த நிறுவனமும், ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த ‘தி எக்ஸ்ப்ளோரேஷன் கம்பெனி’ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனமும் இணைந்து, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் – 9 ராக்கெட் வாயிலாக, 166 பேரின் அஸ்தி மற்றும் டி.என்.ஏ., மாதிரிகளை Mission Possible என்ற விண்கலம் மூலம் ஏவப்பட்டது. திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விண்கலம் பசிபிக் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.அமெரிக்க விண்வெளி நிறுவனமான செலஸ்டிஸ், இறந்தவர்களின் சாம்பலை விண்வெளிக்கு அனுப்பி, அவர்கள் நினைவை பதிவு செய்யும் திட்டமாக இதை செயல்படுத்தியது.இந்த விண்கலம், கடந்த மாதம், 23ல் விண்வெளிக்கு ஏவப்பட்டது. திரும்பும் வழியில் பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாகவும், அதை மீட்க முடியவில்லை என்றும் செலஸ்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக செலஸ்டிஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியது.

