டில்லி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தொகுதி பங்கீடு காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே உடன்படிக்கை எட்டியது

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

இந்தியா கூட்டணியில் உத்தர பிரதேசத்தைத் தொடர்ந்து, டெல்லியில் தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான இந்திய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக, காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கூட்டணியை பலப்படுத்தவும், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதில், நாட்டிலேயே அதிக தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் கை கோர்த்து காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது.
இதேபோன்று, 7 மக்களவைத் தொகுதிகளை கொண்ட டெல்லியிலும் காங்கிரஸ் மற்றும் ஆளும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், இந்த நிலையில், ஆம் ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிட தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *