சாம்பியன்ஸ் கோப்பை: மார்ச் 9ம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இறுதிப்போட்டி.

இந்தியா சிறப்பு செய்திகள் முதன்மை செய்தி விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 9ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது, இறுதி போட்டியில் இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது. நேற்று மார்ச் 5ம் தேதி லாகூரில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வென்ற நியூசிலாந்து அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. டாஸ் வென்ற, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் குவித்தது. தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற 363 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.தென் ஆப்ரிக்க அணியினர் களத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்கத் தொடங்கினர். இருப்பினும், 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் மட்டுமே பெற்றனர். இதன் மூலம், நியூசிலாந்து அணி 50 ரன் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.இந்த வெற்றியின் மூலம் மார்ச் 9ம் தேதி துபாயில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணிகள் எதிர்கொள்கின்றன . ஐ.சி.சி., சாம்பியன்ஸ் கோப்பை, உலகக் கோப்பை போன்ற முக்கிய கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியும் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதி போட்டியில் தொடர்ந்து தோல்வி அடைந்து வெளியேறுவது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதிப்போட்டி மார்ச் 9ம் தேதி நடைபெறும் நிலையில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *