நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக தங்கள் படிப்பை பாதியில் கைவிட நேர்ந்த மருத்துவ மாணவர்களை இந்தியாவிலுள்ள கல்லூரிகளில் சேர்ந்துக் கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரி டில்லியின் ஜந்தர் மந்தரில் இன்று மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரஷ்யா-உக்ரைன் யுத்தம் காரணமாக உக்ரைனில் போர் சூழுலில் உணவு மற்றும் பாதுகாப்பின்றி தவித்து வந்தவர்களை இந்திய அரசாங்கம் தனி விமானம் மூலம் மீட்டது குறிப்பிடத்தக்கது.
போர் மூலமாக தங்கள் படிப்பு பாதியிலேயே நின்று தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதால் அரசாங்கம் தலையிட்டு தங்களுக்கு உதவ வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர். மேலும் அவர்களின் பெற்றோர் தெரிவிக்கும் போது தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் பாழாகிவிடுமோ என்னும் கவலையுடன் இருப்பதாகவும், அரசாங்கம் தான் உதவ வேண்டும் எனவும் தெரிவித்தனர்.