கனரக வாகனங்களில் ஓட்டுநர்களுக்கு குளிர்சாதன வசதி ஏற்பாடு செய்வது கட்டாயம்; அடுத்தாண்டு முதல் நடைமுறைக்கு கொண்டுவர திட்டம் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

அரசியல் ஆரோக்கியம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை வரும் நிகழ்ச்சிகள்

2025-ம் ஆண்டு முதல் கனரக வாகனங்களில் குளிர்சாதன வசதி அறை கட்டாயம் என்று ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சாலைகளில் 90 லட்சம் ஓட்டுனர்கள் தினமும் பயணித்து வருவதற்காக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் ஏராளமானோர் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.இதில் கனரக வாகனங்களை சுமார் 14 மணிநேரம் தொடர்ந்து இயக்கம் ஓட்டுனர்களின் நலனை கருத்தில் கொண்டு குளிர்சாதன வசதி அறையை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தவுள்ளது. ஏற்கனவே volvo மற்றும் scania நிறுவனங்களின் கனரக வாகனங்களில் குளிரூட்டப்பட்ட ஓட்டுநர் இருக்கை இருக்கின்றன.இதேபோன்று மற்ற நிறுவன வாகனங்களிலும் ஓட்டுனருக்கு ஏசி வசதி அறையை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார். டெல்லியில் ஆட்டோ மொபைல் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதின் கட்கரி, இந்த திட்டத்தை முன்கூட்டியே அமல்படுத்த அறிமுக இருந்ததாக தெரிவித்தார்.ஆனால் இதற்கு செலவு அதிகரிக்கும் என்றும், ஏசி அரை இருந்தால், ஓட்டுனர்களுக்கு தூக்கம் வரும் என்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக நிதின் கட்கரி கூறினார். இதனிடையே கனரக வாகனங்களில் ஏசி வசதியுடன் கூடிய இருக்கைக்கு கூடுதலால 10,000 முதல் 20,000வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த மாதம் 22-ம் தேதி இரவு ஓட்டுனர்களின் மனதின் குரலை கேட்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி லாரியில் பயணம் செய்தார். இதனை தொடர்ந்து 2025-ம் ஆண்டு முதல் கனரக வாகனங்களில் குளிர்சாதனை வசதி அறை கண்டிப்பாக இருக்கவேண்டும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *