தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகர்னூர் பகுதியில் உள்ள ஸ்ரீசைலம் இடதுகரை சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கியுள்ள 8 பேரை மீட்கும் பணியில் இந்திய ராணுவத்தின் பைசன் பிரிவு பொறியாளர் குழு இணைந்துள்ளது.
கட்டுமான வேலை நடந்து வந்த சுரங்கப் பாதையின் கூரை சனிக்கிழமை காலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டுமான வேலை நடந்து வந்த சுரங்கப் பாதையின் கூரை . இதில் 8 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். சுரங்கத்தின் 14-வது கிலோ மீட்டரில் சுமார் 3 மீட்டர் அளவுக்கு சுரங்கம் .gஇடிந்துள்ளதுராணுவம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், சுரங்கப்பாதியில் உள்ள இடிபாடுகளை அகற்றுவதற்கும், உள்ளே சிக்கியவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கும், உயர் திறன்கொண்ட பம்பிங் செட்கள், தோண்டும் இயந்திரங்கள் மற்றும் புல்டோசர்களுடன் ராணுவ பொறியாளர்கள் மற்றும் மருத்துவ குழுக்கள் செயல்பட்டு வருகின்றனர். மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக, இந்திய ராணுவம் பிற மீட்பு குழுக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் மீட்பதே ராணுவத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. தெலங்கானா அரசு, தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, ராணுவம் மற்றும் சுரங்க கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் கூட்டுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

