தமிழ்நாடு அரசு பேருந்துகளில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு சிறப்பு குலுக்கல் பரிசுகள் அறிவிப்பு.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு விளம்பர செய்திகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்க, 01/04/2025 முதல் 15/06/2025 வரை பயணம் செய்யும் பயணிகளுக்கான சிறப்பு குலுக்கல் முறையில் 75 பயணிகளை கணினி மூலம் தேர்வு செய்து, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிப்பு. இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலைதூர பயணிகள் பயணச்சீட்டுகளை எளிதாக முன்பதிவு செய்ய, ஆன்லைன் பயணச்சீட்டு முன்பதிவு முறை (OTRS) உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பயணிகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் உட்பட தமிழ்நாட்டின் ஏழு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளைப் பயன்படுத்தி பயணம் செய்து பயணிகள் பயனடைகிறார்கள். இந்த முன்பதிவு முறையை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் இணையதளம் மற்றும் TNSTC மொபைல் செயலி மூலம் பதிவுச் செய்யலாம். தற்போது, பயணிகள் 90 நாட்கள் முன்பே முன்பதிவு செய்யும் முறை உள்ளது. தினசரி சுமார் 20,000 இருக்கைகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. 2024 ஜனவரியில் இருந்து மே 2024 வரை, ஒவ்வொரு மாதமும் மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் 2024 முதல், ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் திட்டம் விரிவாக்கப்பட்டது, இதில் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ.10,000 மற்றும் மீதமுள்ள பத்து வெற்றியாளர்களுக்கு ரூ.2,000 வழங்கப்பட்டது. மேலும், இந்த ஆண்டின் கோடை காலத்திற்கான ஒரு புதிய சிறப்பு குலுக்கல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து, 01/04/2025 முதல் 15/06/2025 வரை பயணம் செய்யும் 75 பயணிகள் இந்த சிறப்பு முறையில் தேர்வு செய்யப்பட்டு, இலவச பயண சலுகையை பெறுவர் என கூறப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளை பயன்படுத்தி பயணம் செய்யலாம் என அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *