வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து பேரவையின் 36வது தமிழ் விழாவை கோலாகலமாக சாக்ரமெண்டோ, காலிஃபோர்னியாவில் ஜூன் 30, ஜூலை 1,2 ஆகிய தேதிகளில் கொண்டாட விருக்கிறார்கள்.
இப்பெரும் தமிழ் விழாவின் கருப்பொருள் – “தொன்மை, தமிழரின் பெருமை” ஆகும்.
இவ்விழாவில் பங்கேற்க பதிவு செய்ய அல்லது மேலும் தகவல் அறிய https://fetna-convention.org என்னும் வலைத்தளத்தை அணுகலாம்.
இந்நிகழ்வின் போது தொழிற்காட்சி, ஐடியா பட்டறை, தொழில் முனைவோர் கூட்டம், விருதுகள் வழங்கும் விழா, இன்னிசை நிகழ்ச்சிகள், ஆய்வரங்கம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல சிறப்பு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நிகழ்வின் அடுத்தடுத்த முக்கிய செய்திகள் மற்றும் அறிவுப்புகளை உடனுக்குடன் அறிய NRI தமிழ் உடன் இணைந்திருங்கள்.
விழாவில் பங்கேற்க அனைவரையும் வட அமெரிக்கா தமிழ் சங்கத்தினர் அன்புடன் அழைத்துள்ளனர்.