சென்னையில் 2-ஆவது கட்டமாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழா: நடிகர் விஜய் மாணவர்களுக்கு வழங்கினார்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் சினிமா செய்திகள் தமிழ் பள்ளி நிகழ்வுகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

சென்னையில் 2-ஆவது கட்டமாக நடைபெற்ற விஜய்யின் கல்வி விருது வழங்கும் நிறைவடைந்தது. 2-வது கட்ட விழாவில் 720-க்கும் மேற்பட்டோருக்கு விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.
முதற்கட்டமாக கடந்த மாதம் 28-ஆம் தேதி நடந்த விழாவில் 21 மாவட்டங்களை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோருக்கு விஜய் சான்றிதழ் வழங்கினார். இதையடுத்து, மீதமுள்ள 19 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை பாராட்டும் 2-ஆம் கட்ட விழா நடைபெற்றது.
இதில், 720-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறிய விஜய், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 9 மணி நேரத்திற்குப் பிறகு விழா நிறைவடைந்ததையடுத்து, கட்சியின் நிர்வாகிகளுடன் குழு புகைப்படம் எடுத்த பின்னர், விஜய் புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *