சன் பிச்சர்ஸ் நிறுவனம் புதிய திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டது; அல்லு அர்ஜூன், அட்லி புதிய கூட்டணியில் பிரம்மாண்ட படைப்பு

இசை இந்தியா சினிமா சின்னத்திரை செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பொழுதுபோக்கு மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க இருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. இநத அறிவிப்பு வெளியானதுமே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்ற ஒரு எதிர்பார்ப்பும் , இந்தியாவே காத்திருந்த கனவும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்திருக்கிறது. இந்தியாவின் பிரம்மாண்டம் என பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கர் இருந்தார். இன்று அவரது சிஷ்யன் அட்லீ என்பது வியப்பை அளித்துள்ளது. இதில் இருவருக்கும் உள்ள ஒற்றுமையை இதில் காணலாம்.
சன் பிக்சர்ஸ் கூலி, ஜெய்லர் 2 படங்களை தயாரித்து வருகிறது. இந்த படங்களின் பட்ஜெட்டை காட்டிலும் அட்லீ இயக்கும் படத்திற்கு மிகப்பெரிய தொகையை ஒதுக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜவான் படத்தின் வெற்றிக்கு பிறகு அட்லீ தனது 6ஆவது படத்தை இயக்க இருக்கிறார். விஜய் நடிக்க இருக்கும் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், அல்லு அர்ஜூனுடன் கூட்டணி சேர்ந்து இந்தியாவே பிரம்மிக்கும் வகையில் அவதார் ரேஞ்சிற்கு படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
அட்லீ உலகையே பிரம்மிக்கும் வகையில் சைன்ஸ் பிக்சன் படத்தை இயக்க இருக்கிறார். பட அறிவிப்பு வெளியான இன்று வெளியான வீடியோவில் அட்லீ கூறிய கதையை கேட்டு பிரம்மிக்க வைப்பதாக தெரிவித்துள்ளனர். ப்ரீயட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் ஷங்கர் தான் இயக்கும் படத்தில் படத்தின் காட்சிகளை விட பாடல்களில் ஒரு பிரம்மாண்டம் இருக்கும். அதேபோன்று அதில் ஒரு வித்தியாசம் காட்டுவார். குருவை மிஞ்சிய சிஷ்யனாக வளர்ந்திருக்கும் அட்லீ பாலிவுட்டையே கலங்கடித்தார். இப்போது இந்தியாவை தாண்டி செல்வாரா என்பது தான் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *