தீபாவளி அன்று தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்த ஒரே நாளில் வெளியான இந்த 4 படங்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது, வெளியான படங்களில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. வீர மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் ‘அமரன்’. ‘ரங்கூன்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், முகுந்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்தனர்.
இந்த நிலையில், ‘அமரன்’ படத்தின் மூலம் புதிய சாதனை படைத்து விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களையே பின்னுக்குத் தள்ளியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். ‘புக் மை ஷோ’-வில் ‘அமரன்’ படத்திற்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்துள்ளன. இதுவரை ‘Book My Show’ மூலம் 4.55 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. அதே சமயம், விஜயின் ‘தி கோஸ்ட்’ டிக்கெட்டுகள் 4.5 மில்லியனும், ரஜினியின் ‘வேட்டையன்’ டிக்கெட்டுகள் 2.7 மில்லியனும் விற்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்ட படமாக ‘அமரன்’ புதிய சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

