ஏர் இந்தியா விமான விபத்து; விமானத்தில் 11A என்ற இருக்கை எண்ணில் பயணித்த ரமேஷ் என்பவர் காயங்களுடன் உயிர் தப்பினார். உயிருடன் மீட்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி. விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் எனப்படும் அவசரகால வழி மூலம் கீழே குதித்து காயங்களுடன் உயிர் தப்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியின் விடுதியில் ஏர் இந்தியா விமானம் மோதியதில் ஐந்து மருத்துவ மாணவர்கள் இறந்தனர். 40க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் காயமடைந்தனர். பலியானவர்களில் நான்கு இளங்கலை மாணவர்கள் மற்றும் ஒரு முதுகலை பட்டதாரியும் அடங்குவர். விமானம் விழுந்தபோது மருத்துவ மாணவர் விடுதி உணவகத்தில் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். விமானம் விழுந்ததும் பலர் அதில் சிக்கிக்கொண்டனர். பலர் தப்பி ஓடினர்.
இதனிடையே அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காண, உறவினர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உறவினர்களிடம் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க மருத்துவமனைகளில் ஏற்பாடு என்று குஜராத் சுகாதாரத் துறை செயலாளர் தனஞ்சய் திவேதி தெரிவித்துள்ளார்.
