மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார்; கன்னியாகுமரி செல்லத் திட்டம்

அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இம்மாத இறுதியில் மீண்டும் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பாண்டில் மூன்றாவது முறையாக தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கன்னியாகுமரிக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அண்மையில் அரக்கோணம் அருகே மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் 56-ஆம் ஆண்டு தின நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
மேலும், கோவையில் கட்சி அலுவலகம் திறப்பு, ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவிலும் அவர் பங்கேற்றிருந்தார். அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள சூழலில் கடந்த 3 மாதங்களில் மூன்றாம் முறையாக, அமித் ஷா தமிழ்நாடு வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *