கோட்டக் மஹிந்திரா வங்கி கிரெடிட் கார்டுகளை வழங்கவும், வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கும் ரிசர்வ் வங்கி தடை

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் பொருளாதாரம் மற்றவை முதன்மை செய்தி

கோட்டக் மஹிந்திரா வங்கி கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கும், வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
கோட்டக் மஹிந்திரா வங்கி நாட்டின் 5-வது பெரிய தனியார் வங்கியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு எதிராக ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவல் படி புதிய வாடிக்கையாளர்கள் சேர்க்கவும், கிரெடிட் கார்டு வழங்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அடுத்து உத்தரவு வரும் வரையில் இவ்வங்கி புதிய வாடிக்கையாளர்களை ஆன்லைன் மற்றும் மொபைல் வங்கி சேனல்கள் வழியாக சேர்க்க கூடாது. மேலும் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வங்கியின் இணைய சேவை பாதுகாப்பு குறித்து நடந்திய ஆய்வில் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் ரிசர்வ் வங்கியின் விதிகளை கடைபிடிக்க தவறியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *