விஜயின் ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘அரபிக் குத்து’ பாடல் யூடியூப்பில் 700 மில்லியன் வியூஸ்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘பீஸ்ட்’. பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.w
அனிருத் இசையமைத்தார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
குறிப்பாக ‘அரபிக் குத்து’ பாடல் ரசிகர்களை ஈர்த்தது. அனிருத், ஜோனிடா காந்தி இணைந்து பாடிய இந்தப் பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். பாடலும், நடனமும் வைரலான நிலையில் வியூஸ்கள் குவிந்தன. இந்நிலையில் 2 ஆண்டுகள் கழித்து யூடியூப்பில் 700 மில்லியன் வியூஸ்களை கடந்து இப்பாடல் சாதனை படைத்துள்ளது.

