டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பெரும்பான்மையை நிருபித்து வெற்றி பெற்றுள்ளார்.
டெல்லி சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை இன்று கொண்டு வந்து பேசினார். அதைத் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு ஆதரவாக 54 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஒரு உறுப்பினர் எதிர்த்து வாக்களித்தார். எனவே அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆம் ஆத்மியைச் சேர்ந்த 2 பேர் சிறையிலும், மீதமுள்ளோர் தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது.
2024-ம் ஆண்டு தேர்தலில், பாஜக வெற்றி பெற்றாலும் பரவாயில்லை. 2029 தேர்தலில் வெற்றிபெற்று பாஜக இல்லாத நாட்டை ஆம் ஆத்மி கட்சி உருவாக்கும்” என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

