ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய சுற்றுலா இணையதள முகவரி; தமிழக அரசு அறிமுகம்

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கோயில்கள் சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

ராமேஸ்வரத்தில் உள்ள ஆன்மீக ஸ்தலத்தையும், சுற்றுலா ஸ்தலத்தையும் காணவரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய இணையதளம் முகவரி வெளியிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல் முனை, தேவிபட்டினம், உத்திரகோசமங்கை, திருப்புல்லாணி, ஏர்வாடி, தொண்டி ஆகிய பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளது. இதில் குறிப்பாக ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோவில், பாம்பன் பாலம், அப்துல்கலாம் தேசிய‌ நினைவிடம், ராமர் பாதம் என அதிகப்படியான சுற்றுலா ஸ்லங்களும் ஆன்மீக ஸ்தலங்களும் உள்ளது.
இதனால் ராமேஸ்வரத்தில் உள்ள ஆன்மீக ஸ்தலங்களையும், சுற்றுலா தளங்களையும் கண்டுகளிக்க தமிழ்நாடு வடமாநிலங்கள், பிற‌நாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், ராமேஸ்வரத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் www.rameswaramtourism.org என்ற புதிய சுற்றுலா இணையதள முகவரியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அறிமுகப்படுத்தினார்.
இந்த இணையதளத்தை பயன்படுத்தி இதன் மூலமாக ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த செலவில் ராமேஸ்வரம் முழுவதும் சுற்றி பார்க்கவும், உணவுகள் ஹோட்டல்கள், விடுதிகள், விடுதி கட்டணங்கள், ரயில் வசதி, பேருந்து வசதி ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம், முன்பதிவு செய்து கொள்ளவும் வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.