வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலவரம்பை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா செய்திகள் நிகழ்வுகள் பொருளாதாரம் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

2025-26 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தாண்டு ஜூலை 31 ஆம் தேதி வரை வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம் என்று மத்திய நிதியமைச்சகம் கூறியிருந்தது.
இந்நிலையில் இதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம்(சிபிடிடி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
“வருமான வரிக் கணக்கு தாக்கல் ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், செப்.15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் படிவங்கள் உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இந்த கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதனால் அனைவரும் துல்லியமாக எளிதாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய முடியும்” என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *