வெப் சீரிஸ் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஷாருக் மகன் ஆர்யன் கான்

இந்தியா சிறப்பு சினிமா சின்னத்திரை செய்திகள்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தனது முதல் வெப் சீரிஸ் இயக்குவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம், அவர் திரையுலகில் இயக்குநராக தனது பயணத்தை தொடங்குகிறார். திரைத்துறையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த தொடரில், ஆர்யன் கான் தனது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளார். இந்த தொடர் அடுத்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஷாருக்கான் தனது ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் இதனை தயாரிக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நெட்ஃப்ளிக்ஸுடன் இணைந்து புதிய தொடரை உருவாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது ஆர்யன் கானின் தனித்துவமான கதை. இது முழுமையான பொழுதுபோக்கு தொடராக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார். இந்த தொடரில் நடிகை மோனா சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் திரையுலகில் நடைபெறும் கதை என்பதால், ஷாருக்கான், சல்மான் கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், கரண் ஜோஹர் போன்ற பிரபலங்கள் சிறப்பு தோற்றத்தில் காட்சியளிக்க உள்ளனர். ஷாருக்கானின் அடுத்த படம் ‘கிங்’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது, இதில் அவரது மகள் சுஹானா கான் முக்கியமாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *