ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச்சுடுதல் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியா வெண்கலம் வென்று அசத்தியுள்ளது.
சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் கடந்த ஜூலை 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரீஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.இந்நிலையில், ஆண்களுக்கான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் (50m Rifle 3 Positions) பிரிவின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே உள்பட 8 வீரர்கள் தகுதி பெற்றனர். இவர்களுக்கு இடையில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.