குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர்.8 எண்ணப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் டிசம்பர் 1-ந் தேதி 89 தொகுதிகளிலும் டிசம்பர் 5-ந் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றன.
இமாச்சல பிரதேசத்தில் 68 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 12-ல் தேர்தல் நடைபெற்றது. இமாச்சல பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது.
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் ஆட்சியமைக்க தேவைப்படும் பெரும்பான்மையை விட அதிக இடங்களில் வென்று அம்மாநிலத்தில் ஏழாவது முறையாக ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. இதற்கு முன்பு இத்தகைய ஏழு முறை தொடர் ஆட்சி சாதனை மேற்கு வங்க மாநிலத்தில் இடதுசாரி முன்னணி ஆட்சியில் இருந்தபோது நடந்தது.
இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி இம்முறை ஆட்சியை எதிர்க்கட்சியான காங்கிரஸிடம் பறிகொடுத்துள்ளது. அந்த மாநில சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 68 இடங்களில் ஆளும் பாஜக 25 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கட்சி 40 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பல்ததுடன் ஆட்சியமைக்க தகுதி பெற்றிருக்கிறது. அந்த மாநிலத்தில் மூன்று சுயேச்சைகளும் வென்றுள்ளனர்.
