அமெரிக்க ஜனாதிபதியின் வாழ்நாள் சாதனையாளர் விருது இந்த வருடம் அமெரிக்க வாழ் இந்தியரான கிருஷ்ணா வாவிலாலாவிற்கு வழங்கி கவுரவித்தது அமெரிக்க அரசு.
Americrops என்னும் அமெரிக்க அரசின் நிறுவனம் பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட 5 மில்லியன் அமெரிக்கர்களை கொண்டு சேவையாள்ளி வருகிறது. இந்நிறுவனம் ஆண்டு தோறும் சிறந்த குடிமகன்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இவ்விருதை வழங்குகிறது.
தங்கள் இனத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கும் குடிமகன்களை தேர்ந்தெடுப்பது இதன் சிறப்பம்சம் ஆகும். அதுமட்டுமல்லாது வேலை, சிறந்த நெறிமுறைகளை கடைப்பிடிப்பது போன்ற அம்சங்களையும் கருத்தில் கொள்வது இவ்விருதின் சிறப்பாகும்.
அதுபடி இந்த வருடம் ஹாஸ்டன் மாகாணத்தில் வாழும் அமெரிக்க வாழ் இந்தியரான கிருஷ்ணா வாவிலாலாவிற்கு இந்த விருதை அமெரிக்க அரசு வழங்கி கவுரவித்திருக்கிறது.