இட்லியை கொண்டாடும் கூகுளின் ‘டூடுல்’ .

அமெரிக்கா இந்தியா உலகம் கலை / கலாச்சாரம் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு

இட்லியை கொண்டாடும் கூகுளின் சிறப்பு ’டூடுல்’ கூகுள் நிறுவனம் கூகுள் தளத்தில் அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் கூகுள் நிறுவனம் தமிழர்களின் பாரம்பரிய உணவு வகையான இட்லியை கொண்டாடி இன்று சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சுட சுட இட்லி, சாம்பார், சட்னி, இட்லி தட்டு, ஆகியவற்றை கொண்டு ‘கூகுள்’ என்று எழுதப்பட்ட டூடுலிலாக உள்ளது . இந்த டூடுல் மூலம் தமிழர்களின் பாரம்பரிய உணவான இட்லியின் சுவை, ஆரோக்கியம் உலக அளவில் பிரபலப்படுத்தும் ஒரு முயற்சியாக அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *