சட்டமன்ற உறுப்பினர்களாக முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உறுதிமொழி ஏற்பு.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு

தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் முதலில் சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி ஏற்றார். அவரை தொடர்ந்து அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றனர். பின்னர் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட உறுப்பினர்களும் பதவியேற்றனர்.முதல்வராக நேற்று பதவியேற்ற போது “ஆண்டவன் மீது ஆணையாக” என்று கூறிய விஜய், இன்று சட்டப்பேரவையில் உறுப்பினராக பதவியேற்கும்போது “உளமார உறுதி கூறுகிறேன்” என்று கூறி உறுதிமொழி எடுத்தார். இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக எம்.எல்.ஏ.க்களும் “உளமாற” என்று கூறியே உறுதிமொழி ஏற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *