கோவை மாணவி பாலியல் வன்கொடுமை. மூன்று பேரை சுட்டு பிடித்த காவல்துறை.கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கோவை விமான நிலையம் அருகே தனியார் கல்லூரியில் படித்து வரும் 20 வயது மாணவி தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த 3 மர்ம நபர்கள் விமான நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பகுதிக்கு அப்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.மேலும் அவருடன் இருந்த நண்பரையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் தப்பி தலைமறைவாக இருந்த நிலையில் அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தது. இன்று காலை அவர்கள் இருக்கும் இடம் அறிந்து சென்ற காவல்துறையின் காவலர் ஒருவரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓடிய மூன்று பேர் மீதும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி விசாரித்த நிலையில் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குணா, சதீஷ், கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

