ஆந்திரா பெருமாள் கோயிலில் நெரிசல் விபத்து; கோயில் சீல் வைத்து மூடப்பட்டது.

ஆன்மீகம் இந்தியா கோயில்கள் செய்திகள் திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் மறைவு/இரங்கல்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்கா நகரில் உள்ள புகழ்பெற்ற வெங்கடேஸ்வரஸ்வாமி பெருமாள் கோயிலில் நேற்று நடைபெற்ற திருவிழா கூட்டநெரிசலில் 9 பக்தர்கள் உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்துக்குப் பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகாரிகள் கோயிலுக்கு தற்காலிகமாக சீல் வைத்துள்ளனர்.அதே நேரத்தில், மாநில அரசு இந்த சம்பவம் குறித்து விசாரணை ஆணையம் அமைத்துள்ளது, மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி அறிவிக்கப்பட உள்ளது. காவல்துறை, நெரிசல் ஏற்பட்ட சூழ்நிலையையும், ஏற்பாடுகளில் இருந்த குறைபாடுகளையும் ஆய்வு செய்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *