மக்களவை எதிர்கட்சித்தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தனித்து 99 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக உள்ளது.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று (ஜூன் 26) அறிவித்தார். மக்களவைத் தலைவர் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையின் முடிவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

