பிரம்மபுத்திரா நதி, அருணாச்சல பிரதேசத்தை கடந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நுழைந்து, வங்கதேசத்தின் வழியாக வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இது உலகின் நீளமான நதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது, அதன் மொத்த நீளம் 2800 கிமீ ஆகும். இந்த நதியின் சராசரியான நீர் வெளியேற்றம் ஒரு விநாடிக்கு 19,800 கன மீட்டர் ஆகும். திபெத் பகுதியில் உள்ள சீனா, பிரம்மபுத்திரா நதியின் நீரை வறட்சியான பகுதிகளுக்கு மாற்றுவதற்கான திட்டங்களை முன்பே செயல்படுத்தி வருகிறது.சீனா, பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே மிகப்பெரிய அணியை கட்டுவதற்கான திட்டங்களை முன்வைத்திருந்த நிலையில், இதன் மூலம் உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டத்தை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. தற்போது, திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே, உலகின் மிகப்பெரிய அணியை உருவாக்க சீனா ஒப்புக்கொண்டு செயல்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த 137 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் எனக் கணிக்கப்படுகிறது. சீனாவின் இந்த முடிவு, பிரம்மபுத்திரா நதியை நம்பி வாழும் இந்தியா மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு பெரும் சிக்கல்களை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.பிரம்மபுத்திரா நதி பாயும் நாடுகளான இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு செல்லும் நீரைத் தடுக்கும்போது, இது சர்வதேச அளவிலான பிரச்சினையாக மாறக்கூடும். பிரம்மபுத்திரா நதியின் நீரை நம்பி வாழும் நாடுகளின் நலனுக்காக சீன அரசிடம் இந்திய அரசு பல முறை வலியுறுத்தியுள்ளது. இருப்பினும், சீனா இந்த திட்டத்தை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. 2015-ம் ஆண்டிலிருந்து, சீனாவின் திபெத்தில் 1500 கோடி டாலர் மதிப்பில் ஜாங்மு நீர்மின் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது சீனா 2021 முதல் 2025 வரையிலான ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் பிரம்மபுத்திரா அணையை கட்டுவதற்கான முடிவை எடுத்துள்ளது. சீனா இந்த அணையை கட்டியால், பிரம்மபுத்திரா நதியின் மீது அதன் கட்டுப்பாடு அதிகரிக்கும். இதனால், எல்லைப் பகுதிகளில் இருந்து பெரும் அளவிலான நீரை திறந்து இந்தியா நோக்கி வெளியேற்றும் வாய்ப்பு உருவாகும், இதனால் இந்தியா மிகுந்த கவலையில் உள்ளது. இதற்கிடையில், அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியா பிரம்மபுத்திரா மீது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது.

