ரஷ்யா அதிபராக 5வது முறையாக தேர்வானார் புதின்; அடுத்த 7 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார்

அரசியல் உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மருத்துவம் முதன்மை செய்தி ரஷ்யா

ரஷ்ய அதிபர் தேர்தலில் 87 சதவீத வாக்குகளைப் பெற்று விளாடிமிர் புதின் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
பிரதான எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையில் நடைபெற்ற தேர்தலில், அதிபர் புதின் 87 சதவிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
2000-ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபரான புதின், 2004, 2012 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் ஏற்கெனவே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 5வது முறையாக ரஷ்யாவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 24 ஆண்டுகளாக ரஷ்யாவின் உயர் பதவியில் நீடிக்கும் புதின், அடுத்த 7 ஆண்டுகளுக்கும் அதிபராக நீடிக்கவுள்ளார். இதன் மூலம், ரஷ்ய வரலாற்றில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த தலைவரும் இல்லாத வகையில், நீண்ட காலம் உச்சபட்ச பதவியில் இருந்தவர் என்ற பெருமையை புதின் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *