நடிகர் தளபதி விஜய்யின் “கோட்” திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது, இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. படத்திற்கு மாறுபட்ட கலவையான விமர்சனங்கள் வந்தாலும், அதன் வசூலில் எந்தவொரு குறையும் இல்லை. ஏஜிஎஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், இந்த படம் 455 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. படத்திற்கு மாறுபட்ட விமர்சனங்கள் இருந்த போதிலும், தமிழகத்தில் உள்ள ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் தொடர்ந்து இந்த படத்தை பார்க்க வந்தனர். வார இறுதியில் மட்டுமல்லாமல், வார நாட்களில் கூட “கோட்” படத்திற்கு திரையரங்குகளில் அதிகமான கூட்டம் காணப்பட்டது. இந்நிலையில், இந்த படம் தமிழகத்தில் மட்டும் 100 கோடி ஷேரை பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கொண்டாடப்பட்ட கொண்டாட்டத்தில் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டார். கேக்கை நடிகர் விஜய்யுடன் அர்ச்சனா கல்பாத்தியும் இணைந்து இருவரும் வெட்டினார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.