தமிழக கொரோனா மரண எண்ணிக்கையில் குளறுபடி

தமிழ்நாடு

தமிழகத்தில் சுகாதாரத் துறை தினமும் வெளியிட்டு வந்த கொரோனா அறிக்கையில் 38,025 பேர் மட்டுமே இதுவரை தொற்றால் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் வருவாய்த் துறை 55,000 பேர் தொற்றால் மரணம் அடைந்துள்ளதாகக் கூறி, அவர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது.

இந்த மரண எண்ணிக்கைகளின் வித்தியாசம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்றால் மரணம் அடைந்தவர்கள் என்று இழப்பீடு பெற்றவர்களின் பட்டியலை தீர்க்கமாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் நிகழும் மரணங்களுக்கு 50000ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில் தமிழகம் முழுவதிலும் இருந்து 74,097 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. இதில் 13,204 நிராகரிக்கப்பட்டு மீதமுள்ள 55,390 பேருக்கு இழப்பீடு வழங்கப்படுள்ளதாக வருவாய்த் துறை பதிவேடுகள் குறிப்பிடுகின்றன. மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு, வழக்கத்தைக் காட்டிலும் 1.82 லட்சம் மரணங்கள் அதிகமாக பதிவாகியுள்ளது. இது குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என கோரிக்கைகள் வலுக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *