கொரோனா பாதிப்பால் பெற்றோர் இருவரையும் ஒரே வாரத்தில் இழந்த குழந்தைகளுக்கு உதவி தேவை

செய்திகள் புலம் பெயர்ந்த தமிழர்கள்

கொரோனா பாதிப்பால் பெற்றோர் இருவரையும் ஒரே வாரத்தில் இழந்த குழந்தைகளுக்கு உதவி தேவை.

நெஞ்சம் பதறிப் போகும் சோகக் காட்சி நிலவுகிறது அந்த மூன்று குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்திருப்பதை பார்க்கும் பொழுது. பெற்றோர் இருவரும் ஒரே வாரத்தில் கொரோனா பெருந்தொற்றால் இறந்து விட்டனர். இந்தக் கொரோனா பேரழிவு அவர்கள் வாழ்வையும் சூறையாடி விட்டதென அந்த குழந்தைகளால் நம்பவும் முடியாத பேரிழப்பு. தாய் தந்தை இருவரையும் ஒரே சமயத்தில் இழப்பதென்பது எந்த வயதினராலும் தாங்கிக் கொள்ள முடியாதது தான். அந்தப் பெற்றோரின் அன்பிற்கு வேறொன்றும் ஈடு செய்ய முடியாததே. அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்திற்கென பெற்றோர்கள் (ஜெயசீலன் மற்றும் மனைவி) எந்த ஒரு சொத்தையும் விட்டுச் செல்லவில்லை. உடனடியாக அவர்களுக்கு உதவுவதற்கென எந்த நெருங்கிய குடும்பங்களும் அவர்களுக்கு இல்லை. ஐந்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் கல்லூரியில் படிக்கின்ற அந்த மூன்று குழந்தைகளும் இனி சுயமாக வாழ வேண்டும்.

அந்தக் குழந்தைகளின் உடனடி அவசர தேவைகளுக்காகவும் மற்றும் எதிர்கால கல்வி தேவைகளுக்காகவும் ஜெயசீலனனின் தூரத்து உறவினரான குமார் ராஜா என்பவர் ஃப்ரெமொன்ட், கலிஃபோர்னியாவிலிருந்து நிதி உதவி கோருகிறார். அனைத்து நல்லுள்ளம் கொண்ட நண்பர்களும் இந்த நிதி உதவியில் உங்களால் முடிந்த பங்களிப்பைத் தரலாம். இந்த கடினமான நேரத்தில் அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்திற்கென உதவி, நம்மாலான நன்மைகள் செய்வோம்.

https://gofund.me/c1d599e6

1 thought on “கொரோனா பாதிப்பால் பெற்றோர் இருவரையும் ஒரே வாரத்தில் இழந்த குழந்தைகளுக்கு உதவி தேவை

  1. Thanks NRI Tamil media for supporting this kids .We pray to get better job and education to kids.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *