அமெரிக்காவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த டோனா என்ற பெண், தனது மகள் கேமி கம்மின்ஸ் திருமணத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசையை கொண்டிருந்தார். ஆனால் உடல்நிலை மிகவும் மோசமடைந்து ICU-வில் சிகிச்சை பெற்று வந்ததால், வழக்கமான முறையில் திருமணம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக கேமி கம்மின்ஸ் ICU-விலேயே தனது காதலர் சாண்டியை திருமணம் செய்து கொண்டார். டோனாவின் விருப்பத்தை அறிந்த மருத்துவமனை நிர்வாகமும் குடும்பத்தினருடன் இணைந்து திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது. மருத்துவமனை அறையிலேயே எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில், டோனாவும் தனது மகளின் திருமணத்தை காணும் வாய்ப்பைப் பெற்றார். திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே டோனா உயிரிழந்தது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற மகள் எடுத்த இந்த முடிவு, குடும்ப பாசத்தின் நெகிழ்ச்சியான நிகழ்வாக பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

