டெல்லி குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு.

அரசியல் இந்தியா செய்திகள் போராட்டம்/ கலவரம் விபத்துகள்

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த இருவர் கூட உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்ததால் தாக்கம் அதிகமாக உள்ளது. காயமடைந்த பலர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். இந்த வெடிப்பு திட்டமிட்ட தாக்குதல் என சந்தேகிக்கப்படும் நிலையில், வாகனம், வெடிபொருள் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து போலீஸ் விரைவான விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவத்துக்குப் பிறகு டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி அரசு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *