வரலாறு படைத்த பாலிவுட் திரைப்படம்; ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் அள்ளிய துரந்தர்-2

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் சினிமா செய்திகள் நிகழ்வுகள் பொழுதுபோக்கு மற்றவை முதன்மை செய்தி

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர் திரைப்படம், கடந்த ஆண்டு இந்தி மொழியில் மட்டும் வெளியாகி ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்தது. இதன் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ’துரந்தர்: தி ரிவெஞ்ச்’ என்ற பெயரில் 2ஆம் பாகம் கடந்த 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
சாரா அர்ஜுன், அக்‌ஷய் கன்னா, சஞ்சய் தத், மாதவன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இப்படம் வெளியாகி ஏழே நாட்களில் ரூ.1000 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் 744 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
ரூ.1000 கோடி வசூலித்திருந்தாலும் 6 நாட்களில் ரூ.1000 கோடி ரூபாய் வசூலித்த புஷ்பா 2 படத்தின் சாதனையை முறியடிக்கத் தவறிவிட்டது. மேலும் ‘துரந்தர் 2’ திரைப்படம் ரூ.2000 கோடி வசூலை நெருங்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *