7அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் இறக்குமதி வரி விலக்கு; பட்ஜெட் 2026ல் அறிவிப்பு

அரசியல் ஆரோக்கியம் இந்திய வணிகம் இந்தியா செய்திகள் நிகழ்வுகள் பொருளாதாரம் மருத்துவம் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

7அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்படுகிறது. என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அறிவித்துள்ளார்.
2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார். தனது உரையில் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவை :
கால்நடை மற்றும் அதனுடன் தொடர்புடைய மருத்துவக் கல்லூரிகள், ஆய்வுக்கூடங்கள் அமைக்க கடன் சார்ந்த மூலதன மானியத் திட்டம் (Loan-linked Capital Subsidy Scheme) அறிமுகம் செய்யப்படும்.
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் DATA சென்டர்களை ஏற்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த வழிமுறைகளை மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
20 லட்சத்திற்கும் குறைவான மொத்த மதிப்புள்ள அசையாத வெளிநாட்டு சொத்துக்களை வெளியிடாதவர்களுக்கு வழக்குத் தொடரப்படுவதிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
மருத்துவம், கல்விக்கான மூலத்தொகையில் இருந்து வசூலிக்கப்படும் வரி (TCS) 5% இருந்து 2% மாக குறைக்கப்படுகிறது.
NRI’s அவர்களது சொத்துக்களை விற்கும் பொழுது அதற்கான வரி விகிதங்கள் குறைப்படுகிறது.
வெளிநாடு சுற்றுப்பயணம் செல்வோருக்கு வரிபிடித்தமானது தற்போது உள்ள 5% முதல் 20% ஆக உள்ளது . இது 2% ஆக குறைக்கப்படுகிறது.
விமான உதிரிபாகங்களுக்கான இறக்குமதியில் வரி குறைப்பு
காலணிகள் ஏற்றுமதி செய்வதற்கு மூலப்பொருட்களை வரியில்லாமல் இறக்குமதி செய்ய சலுகைகள் வழங்கப்படுகிறது.
மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் லித்தியம் பேட்டரி களுக்கான இறக்குமதி வரி இல்லை என அறிவிக்கப்படுகிறது.
புற்று நோய்க்கு தேவையான 17 மருந்து வகைகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது
7அரிய வகை நோய்களுக்கான மருந்துகளை இறக்குமதி செய்யும் போதும் அதற்கான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
மைக்ரோ அவன்ளுக்கும் சுங்க வரி இல்லை என்று அறிவிக்கப்படுகிறது.
மத்திய பட்ஜெட் 2026: பாதுகாப்பு பிரிவுகளுக்கான விமான பாகங்களுக்கு சுங்க வரி தள்ளுபடி செய்யப்படும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார். அவர் சுமார் ஒரு மணி நேரம் 26 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *