லிட்டில் இந்தியா வட்டாரம் நேற்று இரவு பிரம்மாண்ட விளக்குகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமயமான அலங்காரங்களால் ஒளிர்ந்தது. ஆண்டு தோறும் சிங்கப்பூரில் நடைபெறும் மிகப்பெரிய இந்துக் கலாச்சார விழாவான தீபாவளி லைட்அப் & உற்சவம் 2025-ஐ லிஷா (LISHA) மிகுந்த சிறப்பாக ஏற்பாடு செய்தது. இந்த ஆண்டு கொண்டாட்டம், தீபாவளியையும், சிங்கப்பூரின் 60ஆவது ஆண்டையும் சிறப்பிக்கும் வகையில் மிகுந்த அர்த்தமிக்கதாக இருந்தது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்” என்னும் கருப்பொருளின் கீழ், சிராங்கூன் சாலையின் 2 கிலோமீட்டர் நீளம் முழுவதும்: 42 அலங்கார வளைவுகள், 60 ஆயிரம் அதிகமான எல்இடி விளக்குகள், பாரம்பரிய & நவீன நடனம் என அனைத்தும் அமைக்கப்பட்டிருந்தன. ஒளி, நிறம் மற்றும் கலாச்சாரம் கலந்த காட்சிகள், தீபாவளியின் ஆனந்தத்தையும் ஒற்றுமையையும் பிரதிபலித்தன. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம், பல்துறை கலாச்சார ஒற்றுமை சிங்கப்பூரின் அடையாளம் என்பதை வலியுறுத்தினார். இந்த நிகழ்வின் போது: 20 சமூக அமைப்புகள் பாராட்டப்பட்டன. இந்துக் அமைப்புகள் & கோவில்கள் இணைந்து President’s Challenge-க்கு $100,000 நன்கொடை திரட்டி வழங்கின. நிகழ்ச்சி இறுதியில் அதிபர் தர்மனும் சிறப்பு விருந்தினர்களும் அழகிய மயில் மிதவை வண்டியில் அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்றனர். பல ஆண்டுகள் கழித்து, இந்த ஆண்டில் உற்சவ அணிவகுப்பு மீண்டும் நடை பெற்று மக்களை மகிழ்ச்சியடையச் செய்தது. 700க்கும் மேற்பட்ட கலைஞர்கள் 25 சமூக மற்றும் கலை அமைப்புகள் 4 வயது முதல் 94 வயது வரையிலான பங்கேற்பாளர்கள் பாரம்பரிய இசை , நடனம், நடைபவனி மற்றும் மிதவை வண்டிகள் சிராங்கூன் சாலை முழுவதும் ஒரு உயிருடன் கூடிய கலாச்சார மேடையாகமாறியது. LISHA மற்றும் LTA இணைந்து நடத்திய பிக் பஸ் டூர், Delfi Orchard முதல் Racecourse Road வரை மக்களுக்குப் பிரமிப்பூட்டும் ஒளிக்காட்சிகளை வழங்கியது. தெரு விளக்குகளின் மகத்தான காட்சிகள் கலாச்சார விளக்கக்கதை குடும்பங்கள் & சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவம்.
LTA, SMRT, SBS Transit, Indian Heritage Centre ஆகியவற்றின் ஆதரவுடன் தீபாவளி அலங்கார பஸ்கள் & ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. முரளி பிள்ளை , மூத்த மாநில அமைச்சர், இந்த வடிவமைப்புகளை வெளியிட்டார். குடும்பங்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோர் இணைந்து லிட்டில் இந்தியாவைச் சுற்றி குறியீடுகள் தீர்த்தல், பாரம்பரிய இடங்களை கண்டறிதல், கலாச்சார வரலாறு அறிதல், வண்ணமயமான நிறுவல்கள் பார்வை என மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். 27 செப்டம்பர் 2025, Tekka Place – Dragon Playground இல் நடைபெற்ற இந்த பயிற்சி இரண்டு அமர்வுகளாக சிறந்த அணிவகுப்பு முறை கள், பாரம்பரிய உடை கலாச்சாரம், புகைப்பட நினைவுகள் என பங்கேற்பாளர்களால் சிறப்பாக அனுபவிக்கப்பட்டது. பிரபல சமையல் கலைஞர் Chef Arifin, POLI @ Clive Street-இல்:60 பிரியாணிகளை 60 நிமிடங்களில் தயாரித்து Singapore Book of Records-இல் இடம்பிடித்தார். மேலும் பாரம்பரிய சமையல் காட்சிகளில்: மசாலா கலவை, பாரம்பரிய சமையல் ரகசியங்கள், சுவை அறிமுக அமர்வுகள் என மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புள்ளி கோலம், நிற கோலம் கற்றுக் கொண்டனர். கோங்களின் கலாச்சார அர்த்தம் விளக்கப்பட்டு, அனைவரும் தங்கள் படைப்புகளை சமூக வலை தளங்களில் பகிர்ந்தனர். Campbell Lane-இல் அமைந்த இந்த பண்டிகை கிராமத்தில் இனிப்புகள் & காரங்கள், பாரம்பரிய ஆடை & நகைகள், வீட்டு அலங்காரப் பபொருட்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான இன்டராக்டிவ் செயல்பாடுகள் எல்லாம் மக்கள் விருப்பத்தைப் பெற்றன. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகள் பெருமளவில் வந்தனர். 18 நவம்பர் 2025, PARK ROYAL Collection Marina Bay-இல் நடை பெற்ற காலா டின்னர்: சிறப்பு விருந்தினர் Dr Janil Puthucheary, கலாச்சார இசை & நடனங்கள், விருந்தினர்களுக்கான நெட்வொர்க்கிங், உற்சாகமான Lucky Draw, தீபாவளியின் ஒளியை பிரதிபலிக்கும் சிறப்பான இரவு என்பதை உருவாக்கியது. தீபாவளி லைட் அப் & உற்சவம் 2025, சிங்கப்பூரின் பல்துறை கலாச்சாரசக்தியையும் சமூக ஒற்றுமையையும் பிரகாசமாக வெளிப்படுத்தியது.பாரம்பரியம், கலை , ஒற்றுமை மற்றும் கொண்டாட்டம். ஒளி இருளை வென்றது போல, இந்த தீபாவளியும் நம்பிக்கை , ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியின் செய்தியை அனைவரின் மனதிலும் விதைத்தது.

