தமிழகத்தை சேர்ந்த மூத்த பெண் வழக்கறிஞர் உட்பட 5 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு.

இந்தியா செய்திகள் நீதி மன்றம் பெண்கள்

உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: நீதிபதிகள் எண்ணிக்கை 37 ஆக உயர்வுஇந்தியாவின் உயரிய நீதிமன்றமான உச்சநீதிமன்றத்தில் ஐந்து புதிய நீதிபதிகள் பதவியேற்றுள்ளனர். இதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 32-ல் இருந்து 37 ஆக உயர்ந்துள்ளது.சமீபத்தில், உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கையை 34-ல் இருந்து 38 ஆக உயர்த்தும் அவசரச் சட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்த ஐந்து பேரின் பெயர்களுக்கும் மத்திய அரசு கடந்த 1ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்தது.டெல்லியில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தலைமை நீதிபதி சூர்ய காந்த் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட ஷீல் நாகு, ஸ்ரீ சந்திரசேகர், சஞ்சீவ் சச்தேவா, அருண் பள்ளி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனா ஆகியோருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இவர்களில் வி. மோகனா நேரடியாக வழக்கறிஞர் பணியில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற நான்கு பேரும் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகளாக பணியாற்றி, பதவி உயர்வு அடிப்படையில் உச்சநீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.இந்த புதிய நியமனங்கள் மூலம் உச்சநீதிமன்றத்தின் நீதித்துறை வலிமை மேலும் அதிகரித்துள்ளதுடன், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *