உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்கிறது. இந்த நீண்டகாலப் போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றன. அதேசமயம், போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போனது. இதனால் இரு நாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன.இந்த நிலையில், நேற்று நள்ளிரவு ரஷியா உக்ரைனில் புதிய அதிரடி தாக்குதலை நடத்தியது. குறிப்பாக டெர்னோபில் நகரை நோக்கி 470 டிரோன்கள் மற்றும் 48 ஏவுகணைகள் மூலம் ரஷியா தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், குறைந்தது 40 பேர் கடும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தாக்குதல் காரணமாக நகரில் பல கட்டிடங்கள் சேதமடைந்து, மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

