2025 தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி தொடருமா என்பது குறித்து அனைவரிடமும் கேள்விகள் எழுந்த நிலையில். ஐபிஎல் 18-வது ஐபிஎல் தொடர் வரும் 22-ஆம் தேதி கொல்கத்தாவில் ஆரம்பிக்கவுள்ளது. தொடக்க போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கு முன்னதாக, அனைத்து அணிகளின் கேப்டன்கள் மும்பையில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் முக்கியமான விதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இம்பாக்ட் பிளேயர் விதி பற்றியும் விவாதிக்கப்பட்டது, அதில் 2027 ஆம் ஆண்டு வரை இம்பாக்ட் பிளேயர் விதி செயல்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விதியின் மூலம் ஒரு வீரரை மாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது.மும்பை அணியின் கேப்டன்கள் ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா கடந்த காலங்களில் இந்த விதிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தாலும், இளம் வீரர்களுக்கு விளையாட வாய்ப்பு வழங்குவதால் இந்த விதி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
