திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா வரும் அக்டோபர் 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.அதன்பின் பல்வேறு சிவபூஜைகள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெறும். காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா ஆரம்பமாகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 27-ம் தேதி நடைபெறும். அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்காக எழுந்தருளுவார்.பின்னர் கடற்கரையில், சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும். விழா நிறைவாக, ஜெயந்தி மண்டபத்தில் சுவாமிக்கும் அம்மனுக்கும் மகா தீபாராதனை நடைபெறும். பின் மறுநாள் வள்ளி தெய்வயானை சமேத சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்று கந்தசஷ்டிவிழா நிறைவு பெறும்.இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், கோயில் நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

