அமெரிக்காவின் 250வது சுதந்திர தின விழாவில் 80வது பிறந்தநாளை கொண்டாடிய டிரம்ப்.

செய்திகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 80வது பிறந்தநாளை நேற்று உற்சாகமாகக் கொண்டாடினார். அமெரிக்க வரலாற்றில் மிக அதிக வயதில் அதிபர் பதவியேற்ற தலைவராக அவர் குறிப்பிடப்படுகிறார்.டிரம்பின் பிறந்தநாளுடன் இணைந்து, அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் கையெழுத்திடப்பட்டு 250 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதன் ஒரு பகுதியாக, வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் “Freedom 250” என்ற பெயரில் சிறப்பு விழா நடத்தப்பட்டது. இதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ஏழு சண்டைப் போட்டிகள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெற்று பார்வையாளர்களை கவர்ந்தன.சமீப காலமாக ஈரான் தொடர்பான போர் பதற்றம் மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலையால் மனஅழுத்தத்தில் இருந்த அமெரிக்க மக்களுக்கு, இந்த விழாக்கள் புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.மேலும், அமெரிக்காவின் 250வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நாடு முழுவதும் கலாச்சார நிகழ்ச்சிகள், அணிவகுப்புகள் மற்றும் தேசபற்று நிகழ்வுகளும் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *